டிசம்பர் 11, 2011

நெருக்கடியில் தவிக்கும் ஐரோப்பா  

ூரோ’வைப் பாதுகாக்க கடும் நிதிக்கட்டுப்பாடு

யூரோ நாணய முறை பின்பற் றப்படும் ஐரோப்பிய மண்டலத்தில் நிலவும் நிதித் தட்டுப்பாடு, கடன்நெருக் கடியை சமாளிக்க தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு-செலவுத் திட்டத்தி லும்மாற்றங்களைச் செய்ய அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், இந்த யூரோ கூட்டமைப்புமண்டலத் தில் உள்ள 27 நாடுகளில் யூரோவை பயன்படுத்தும் 17 நாடுகள் மட்டுமே இந்தத் தீர்வைஉடனடியாக ஏற்றுக் கொண்டன. யூரோவைப் பயன்படுத்தாத பிரிட்டன், இந்தத் திட்டத்திலிருந்துவிலகி நிற்பதாக அறிவித் துள்ளது. அதே நேரத்தில் சுவீ டன், ஹங்கேரி, செக், டென் மார்க்,போலந்து, லாட் வியா, அயர்லாந்து உள் ளிட்ட 9 நாடுகள் தங்களது நாடாளுமன்றங்களில் இதுகுறித்து ஆலோசித்துவிட்டு முடிவெடுப்பதாக அறிவித் துள்ளன.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த இரு நாட்களாக ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் யூரோ மண்டலப் பொருளாதார நெருக்க டிக்கு நீண்ட கால அடிப் படையில் தீர்வு காண்பதுகுறித்து ஆலோசனை நடத்தினர்.

இக் கூட்டத்தில்“நிதிக் கட்டுப்பாடு என்ற திட்டத் தின் கீழ் புதிய கட்டுப் ாடு களை கடைபிடிக்கஇந்த நாடுகள் முடிவு செய்தன. இந்தத் திட்டத்தில் அடங்கி யுள்ள முக்கிய அம்சங்கள்:

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் தங்கள் ஆண்டு பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறை மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி), 0.5 சதவீதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக்கூடாது. மீறினால், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.

இந்த விதிகளை தங்க ளது நாடுகளின் அரசியல் சாசனங்களில் திருத்தங்கள் செய்து சேர்க்கவேண்டும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்படும் போது உதவும் வகையில் உருவாக்கப்பட்டுவரும் ஐரோப்பியன் ஸ்டெபி ளிட்டி மெக்கானிசம் என்ற நிரந்தர அமைப்பு 2012ம் ஆண்டு ஜூலைமுதல் செயல்படத் துவங்கும்.

இந்த அமைப்புக்கு தற் போது ஒதுக்கப்பட்டுள்ள 666 பில்லியன் டாலர் நிதி போதுமா என்பதுஆராயப் பட்டு, தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்.

கடனில் சிக்கித் தவிக் கும் ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்காக, சர்வதேச நிதியத்திற்குகூடுதலாக 200 பில்லியன் யூரோ நிதி வழங் கப்படும். இந்த நிதியை பொருளாதார பலம் கொண்டஐரோப்பிய யூனி யன் மற்றும் யூரோ மண்டல நாடுகள் வழங்கும். வரும் ஆண்டு மார்ச் மாதம் முதல்இந்த நிதிக் கட்டுப்பாடு திட்டம் அமலுக்கு வரும்.

இந்தத் திட்டத்துக்கு யூரோ மண்டலத்தில் உள்ள 27 நாடுகளிடம் இருந்துமே சம்மதத்தைப் பெற இத்திட்டங்களை முன் வைத்த ஜெர்மனியும் பிரான்சும் முயன்றன. ஆனால், அதை பிரிட்டன் உள்ளிட்டநாடுகள் ஏற்காததால், இது ஒரு ஐரோப்பிய ஒப்பந்த மாக ஆகாமல், அதற்கும் குறைவாக நாடுகள்இடையி லான ஒரு உடன்படிக்கை யாகவே ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் முன் மொழியப்பட்டுள்ள சில நிதி ஒழுங்கு முறைகளில் இருந்து விலகுவதாகபிரிட் டிஷ் பிரதமர் டேவிட் கேம ரூன் திட்ட வட்டமாகக் கூறிவிட்டதோடு, உடன் படிக்கையைஏற்கவும் மறுத்துவிட்டார்.

இந்த
 உடன்படிக்கை யை ஏற்பது பிரிட்டனின் நலன்களுக்கு உகந்ததல்ல என்பதால் பிரிட்டன்இதில் கையெழுத்திடவில்லை என் றும் கேமரூன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக