டிசம்பர் 18, 2011

ஈரானை தாக்க தயங்கும் இஸ்ரேலின் கபடம்!

nuclear enrichment plant of Natanz in central Iranரானின் அனு உலைகள் மீதோ, அல்லது தேர்வு செய்யப்ட்ட இராணுவ இலக்குகள் மீதோ தாக்குதல் நடாத்த வேண்டுமென்றால் இஸ்ரேல் அதை இரகசியமாக மேற்கொள்ளும். அதன் பயங்கரவாத வரலாற்றில் அது பல இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவிற்கு தெரியப்படுத்துவதில்லை. ஆனால் ஈரான் மீதான தாக்குதலிற்கு அது அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கிறது. அதன் பச்சை சமிக்ஞை வரை காத்திருக்கிறது. எதற்காக?


அமெரிக்கா அதன் தேர்தலை எதிர்பார்த்துள்ளது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் விளைவுகள் அமெரிக்க அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்துவதை அது விரும்பவில்லை. ஸியோனிஸ லொபிகளின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அதிபர் வருவதையே யூத தேசம் எதிர்பார்த்துள்ளது. அதன் காரணமாக அமெரிக்க அரசியல் களம் குழப்பப்படாமல் ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதே வேளை அந்த தாக்குதலின் பின் விளைவுகள் தாங்கள் எதிர்பார்க்கும் ஸியோனிஸ ஆதரவு அதிபரிற்கு ஆதரவு புலமாக மாறவும் வேண்டும். இந்த நாசகார யூத திட்டத்திற்காகவே அது காத்திருக்கிறது.
Iran nuclear map
அமெரிக்கா இதற்கான அனுமதியை வழங்க மறுப்பதன் நடைமுறை உண்மை என்னவென்றால் திடீரென மேற்கொள்ளப்படும் சில மணித்தியால தாக்குதல்களால் ஈரானிய அனு உலைகளை அழித்துவிட முடியாது. அது யூரேனியத்தை செறிவூட்டும் மையங்களை தகர்த்து விட முடியாது. ஒரு சில டசின் விமானங்கள் செய்யும் வேலையல்ல இது. மாறாக ஒரு தொடர் யுத்தம் போல விடாமல் தாக்க வேண்டும். பல ஆயிரம் குண்டு வீச்சுக்கள் ஈரானிய நகரங்கள் மீதும், இராணுவ மையங்கள், தளங்கள் மீதும் மேற்கொள்ள வேண்டும்.  ஈரானிற்கு திருப்பி தாக்க எந்த அவகாசமும் இல்லாத வகையில் விடாமல் தாக்க வேண்டும். ஈரானிய நிர்வாகம் ஸ்தம்பிதமடைய வேண்டும். பொது விநியோகங்கள் முற்றாக சீர்குலைக்கப்படல் வேண்டும். எந்த நகரங்களிலும் மின்சாரம், தண்ணீர் போன்றவை இல்லாத நிலை உருவாக வேண்டும். சுருக்கமாக சொன்னால் ஈராக்கை தாக்கியதை போன்று 10 மடங்கு அதிகமாக தாக்க வேண்டும்.

முடியுமா? அமெரிக்க வான்படையால் முடியுமா? தாக்குதலிற்கான வான் பரப்புக்களிற்கான தேசங்களின்அனுமதி? வான்தளம் எது? ஆயிரத்திற்கும் மேற்பட்ட வான் தாக்குதலிற்கு பயன்படுத்தப்படும் தாக்குதல் தளம்? ஏனைய மேற்குலகின் பயங்கரவாத தேசங்களின் வான்படை உதவி தேவையா? இது தான் அமெரிக்காவின் பிரச்சனை. அழிக்க முற்பட்டால் அடியோடு அழித்தொழிக்க வேண்டும். திட்டம் சற்று பிசகினாலும் ஈரானிய ஜனாதிபதி ஒரு முறை சொன்னது போல “உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் இல்லாமல் போய்விடும்”        -  ABU MASLAMA -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக