செப்டம்பர் 06, 2011


நோன்பு மாதத்தில் மட்டும் 30 பேர் 

மரணம் 400பேர் கைது - பலஸ்தீனில் 

ஸியோனிஸ வெறியாட்டம்


ரமழான் மாதம் முஸ்லிம்களிற்கு 
புனிதமானது. அமைதியாக 
இறைவணக்க வழிபாடுகளை அதிகம் 
அதிகம் முனைப்புடன் செய்வது இந்த 
மதத்திலேயே. இது பொதுவாக உலக
 முஸ்லிம்களிற்கு பொருந்தும். அதே 
புனித ரமழானில் பலஸ்தீனம் 
அமைதியாக நோன்பு நோற்கவில்லை.


பலஸ்தீனில் மட்டும் 30 முஸ்லிம் சகோதரர்கள் ஸியோனிஸ
 வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 400 இற்கும்
 மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 “இன்டர்நேஷனல் சொலிடாரிட்டி பொளன்டேஷன்” எனும் அமைப்பே
 மேற்படி புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் பலஸ்தீன
 வட்டாரங்கள் 35 பேர் இறந்ததாகவும் 760 இற்கும் மேற்பட்டோர் 
கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் பலஸ்தீன அதிகார சபையின் 
ஹமாஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மூன்று நாடாளுமன்ற 
உறுப்பினர்களும் அடங்குவர். (Mustafa Mutlaq Abu Juheisha (Al-Khalil),
 Anwar al-Zabboun (Bethlehem), and Hassan Yousef). இவர்களோடல்லாமல்
 பலஸ்தீன பத்திரிகையாளர்களின் பட்டியலை கையில் 
வைத்துக்கொண்டு யூத இராணுவம் கைது செய்ய அலைந்துள்ளது. 
அல் ஜஸீராவின் பலஸ்தீனத்தை சேர்ந்த தலைமை செய்தி நிருபரும் 
ஆப்கானிஸ்தானிற்கான செய்தியாளருமான  Samer Allawi நோன்பினை 
கழிப்பதற்கு குடும்பத்துடன் மேற்குக்கரை வீட்டில் தங்கியிருந்த போது
 கைது செய்யப்பட்டுள்ளார்.