செப்டம்பர் 18, 2011



அமெரிக்கா வரும் என புலிகளை நம்ப 


வைத்த மர்ம நபர்: வழுதி



இறுதிக்கட்டப் போரின்போது அமெரிக்க கப்பல் ஒன்றுவந்து, மக்களையும்
புலிகளின் சிரேஷ்ட தலைவர்களையும் காப்பாற்றும் என புலிகள் நம்பியது உண்மை. ஆனால் அப்படி ஒரு கப்பல் வரவில்லை, அவ்வாறு புலிகளுக்குச் சொல்லியது யார் என்று தெரியாத ஒரு நிலை கடந்த 20 மாதங்களாக நீடித்துள்ளது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. புதினம் இணையத்தில் கட்டுரைகள் எழுதி, அதனூடாக தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சையமான வழுதி எனப்படும் பரந்தாமே ஆவார். இவரே புலிகளின் அரசியல் தலைவர்களிடம், அமெரிக்காவின் கப்பல் அல்லது, உலங்குவானூர்தி ஒன்று வர இருப்பதாகச் சொல்லி புலிகளை நம்பவைத்தவர் ஆவார்.
மேலும் வழுதி தனக்கு அமெரிக்க பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட்டின் (Prof. James Clad) சிந்தனை மையத்துடன் (think tank) மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தின் அமெரிக்க பாதுகாப்புத் துணைச் செயலராகப் பணியாற்றியுள்ள பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட் (Prof. James Clad), சிறீலங்கா அரசாங்கத்தின் நெருங்கிய நண்பன் என த நியூயோர்க்கர் (The New Yorker) பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜொன் லீ அன்டெர்சனால் (Jon Lee Anderson) வர்ணிக்கப்பட்டிருந்தவர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

2009ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் இரவு நோர்வேயிலுள்ள பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரைத் தொடர்புகொண்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அமெரிக்க கப்பல் வருவதாகக் கூறப்படும் செய்தியை உறுதிப்படுத்தித் தருமாறு கேட்டிருக்கின்றார். குறிப்பிட்ட பேராசிரியர் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தின் துணைத் தூதுவரை நள்ளிரவு நேரத்தில் தொடர்புகொண்டு வினவியபோது, துணைத் தூதுவர் இது ஒரு முக்கியமான பிரச்சனை என்பதால் பின்னர் தூதுவரைத் தட்டி எழுப்பி, அவர் ஊடாக அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய விவகாரங்களுக்கு துணைச் செயலரும், முன்னாள் சிறீலங்கா தூதுவருமான றொபேட் ஓ பிளேக்கை (றொபெர்ட் Bலகெ) தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறான ஒழுங்குகள் எதுவும் இல்லை என றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையின் முக்கிய அங்கமான வெள்ளைக்கொடி விவகாரத்திற்கு முக்கிய சாட்சியாக விளங்கும் இந்த ஊடகவியலாளர் மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகளிலுள்ள வேறு சிலரும் அமெரிக்காவில் இருந்த வழுதியால் சொல்லப்பட்ட கப்பல் கதைக்கு சாட்சியாக இருப்பதாக நம்பபப்படுகின்றது. அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்களையும் தான் பார்வையுற்றிருப்பதாக குறிப்பிட்ட மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை அனைத்துல ரீதியாக சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என புலம்பெயர்ந்த மக்களால் வலியுறுத்தப்பட்டுவரும் பின்புலத்தில், அதனைத் தடுக்கும் முயற்சிகளில் இறுதிக்கட்டப் போரின்போது மேற்குல நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு பொய்வாக்குறுதி வழங்கிய பலர் முனைந்து வருகின்றனர் என்பதே அப்பட்டமான உண்மையாகும்.

இதேவேளை, றொபேட் ஒ பிளேக் சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டைக்கு குடும்பத்துடன் சென்று விருந்திரனராகத் தங்கியிருந்தார் என்பதை எவரும் மறந்துவிட முடியாது. பான் கி மூனின் மருமகன் முன்னாள் இந்தியப் படை அதிகாரி என்பதும், பான் கி மூனின் அலுவலக அதிகாரி விஜய் நம்பியாரின் சகோதரரும், இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான சதீஸ் நம்பியார் இறுதிப்போர் காலத்தில் சிறீலங்கா படைகளுக்கு உத்தியோகபூர்வ ஆலோசகராக இருந்தவர் என்பதும் புலம் பெயர் சமூகம் நிச்சயம் அறிந்திருக்கவேண்டிய விடையமாகும்.

நிலப்பரப்புகளை இழந்து, போரில் தோல்விகளைச் சந்தித்தும், மனத் தைரியமாக இருந்த புலிகளின் தலைவர்களை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளார் வழுதி. ஆயுதம் ஏந்தாத அரசியல் தலைவர்களுக்கு பிழையான தகவல்களைக் கொடுத்து புலிகளை வேரோடு கருவறுக்க இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து நிற்கும் வழுதி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக