செப்டம்பர் 13, 2011


ஆப்கானிய மண்ணில் மீண்டும் ஒரு மரண அடிவாங்கிய அமெரிக்கா !!

5:30pm. து பாகிஸ்தானிய நேரம். சனிக்கிழமை. மய்டான் 
வர்தாக் மாகாணம் (Maidan Wardag Province). இராணுவ கேந்திர 
முக்கியத்துவம் வாய்ந்த திருப்பத்தில் அமைக்கப்பட்ட
 அமெரிக்க கூட்டுபடையின் இராணுவ தளம். இங்கேயுள்ள 
பலம்பொருந்திய அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவ முகாம் 
ஒரு முறை அதிர்ந்து அடங்கியது. எங்கும் புகைமண்டலம்.
 தீ சுவாலைகள். கந்தக நெடி. மனித ஓலம். எல்லாமே ஒரிரு
 நிமிடங்களில் நடந்து முடிந்த விடயங்கள்.

ஓவர் ரோல் எடுக்க ஆரம்பித்தது அமெரிக்க ஆக்கிரமிப்பு
 இராணுவம். மொத்தமாக 77 பேர் காலி. 116 பேர் காயம். 
அதில் மீண்டும் களப்பணிகளில் ஈடுபட முடியாமல் 
முடமாகியவர்கள் 57 பேர். இறந்தவர்களில் அமெரிக்க
 ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களிற்கு துணைபோகும் 
பொம்மை ஆப்கானிய படையினரும் அடங்குவர். இராணுவ 
தளத்தில் 67% மான கட்டிடங்கள் தரைமட்டம். ஏறத்தாள
 முகாமை கைவிட வேண்டிய நிலை.

இதை செய்தது பகிட்டா
 (Pakita Province)  மாகாணத்தை 
சார்ந்த ஒருஇளம் சிங்கம். 
பெயர் ஸய்புல்லாஹ். அனிடம்
 இருந்தது மனத்துணிவு, 
சஹாதத் மீதான நம்பிக்கை, 
ஒரு இராணுவ ட்றக்,
 9000 கிலோ எடையுள்ள
 T.N.T. வெடிமருந்து, ஒரு 
சில பியுஸ்களும் 
டெட்டனேட்டர்களும். 
அவ்வளதுதான். அமெரிக்க 
பயங்கரவாதிகளை ஒரு நொடியில் இருந்த இடம் தெரியாமல் 
அழித்து விட்டான். ஆப்கானிய மண்ணுக்கான விடுதலை
 போரில் இந்த வருடத்தில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது
 பெரியஅழித்தொழிப்பு தாக்குதல் இது.

அம்புயுலன்ஸ் வண்டிகளிலும், ஹெலிகப்படர்களிலும் பல 
முறை காயப்பட்ட அமெரிக்க பயங்கரவாதிகளினதும், 
படுகாயமடைந்த ஆக்கிரமிப்பாளர்களினதும் உடலங்கள் 
ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஆப்கானிய 
மண் எப்படி ரஷ்ய துருவக்கரடிக்கு புதைகுழியாக மாறியதோ 
அதையொத்த நிலை இப்போது அமெரிக்காவிற்கு. அவர்கள் 
முன்னேறும் ஒவ்வொரு மீட்டரிலும் ஒரு சவக்குழி 
அவர்களிற்காக காத்துக்கொண்டு இருக்கிறது. இவை 
சமகால யதார்த்தங்களின் நிகழ்தகவுகள்.

மேற்படி தாக்குதல் பற்றி வெள்ளைமாளிகையின் 
பேச்சாளர் கூறினார் “தலிபான் பயங்கரவாதிகள் 
அமெரிக்க முகாவை தாக்க மேற்கொண்ட முயற்சி
 நேட்டோ கூட்டுப்படையினரின் உதவியுடன்
 முறியடிக்கப்பட்டுள்ளது. எமது சட்டலைட்
 தகவல்களின் படி இந்த அடிப்படைவாதிகளின் 
தங்குமிடங்களை இனங்கண்டு ஏவுகணை தாக்குதல் 
நடாத்தியதில் 20இற்கும் மேற்பட்ட அடிப்படைவாதிகள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள்”

Abu Maslama

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக