செப்டம்பர் 19, 2011


அரசாங்கத்துடன் பிளேக் முரண்டு பிடிப்பதேன்- கபில்


போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வருகின்ற ஒருவர் தான், அமெரிக்க இராஜாங்கத்    திணைக்களத்தின் தெற்கு மத்திய  ஆசியப் பிராந்தியத்துக் கான உதவிச்யெலர் ரொபேர்ட் ஓ பிளேக்.
அமெரிக்கா இந்த விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை எடுப்பதற்கான காரணமாக உள்ளவர்களில் அவரும் ஒருவர். இந்த விடயத்தில் ரொபேர்ட் ஓ பிளேக் ஏன்  இவ்வளவு    தீவிரமாக இருக்கிறார்  என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.  அண்மைக்காலமாக இருந்து வந்த இந்த சந்தேகத்துக்கு இப்போது ஓரளவுக்கு விடை கிடைத்துள்ளது எனலாம்.

அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள்தான்  இந்த சந்தேகத்தைத்  தீர்த்துக் கொள்வதற்கு  முக்கியமானவையாக இருந்தன.  போரின் இறுதிக்கட்டத்தில் வெளியே தெரிந்தும், தெரியாமலும் பல சம்பவங்கள் நிகழ்ந்தன.
அந்தக் காலகட்டத்தில் கொழும்பில் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றியவர்தான் ரொபேர்ட் ஓ பிளேக்.  அவருக்கு போரின்போது இடம்பெற்ற இரகசியமான பல   சம்பவங்களெல்லாம்  நன்றாகவே தெரிந்திருந்தன.  ஆனால், அராங்கமோ தங்களைத்   தவிர வேறெவருக்கும் ஒன்றும் தெரியாது என்பது போல நினைத்துக் கொள்கிறது.
போரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா சில நகர்வுகளை மேற்கொண்டிருந்தது.  அதில் பிளேக் முக்கியமானதொரு பாத்திரத்தை வகித்திருந்துள்ளார்.  மே 16ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள், தளபதிகள் சரணடை வது குறித்து நோர்வேத் தூதுவருக்கு அறிவித்திருந்தனர். 
அதனை நோர்வேத் தூதுவர் பிளேக்கிடம் எடுத்துக் கூற, பிளேக் அது பற்றி பாதுகாப்புச்யெலர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியிருந்தார்.    மே 17ஆம் திகதி காலையில்   நடந்த இந்தச் சந்திப்பின்போது    சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை  நடுநிலையாளராக அனுப்பி, எஞ்சியுள்ள புலிகளைச் சரணடைவதற்கு ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ஷவிடம் பிளேக் கோரியிருந்தார்.
ஆனால், போர் கிட்டத்தட்ட முடிந்து விட் டது.    புலிகள் சரணடைவதற்கு நடுநிலை ஏதும் தேவையில்லை, யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ளச் சொல்லி   உத்தரவிட்டுள்ளதாகக்  கூறி   அவரைத்   திருப்பி அனுப்பிவிட்டார்   கோத்தாபய ராஜபக்ஷ.
அந்தக்    காலகட்டத்தில் பிளேக்கின் கோரிக்கையை ஏற்று அராங்கம் நடுநிலையாளர் மூலம் புலிகள் சரணடைவதற்கு ஏற்பாடு செய்திருந்தால், இப்போது வெள்ளைக்கொடி விவகாரமோ அல்லது சரணடைந்த போராளிகள் கொல்லப்பட்டது பற்றிய குற்றச்சாட்டுகளோ எழுந்திருக்காது.
அப்போது பிளேக் சரணடையும் புலிகளைக் காப்பாற்ற  முனைந்தாரா? அல்லது இலங்கை அரசைக் காப்பாற்ற முனைந்தாரா? என்ற கேள்விகள் இப்போது எழுகிறது.
பிளேக்கின்,  அதாவது அமெரிக்காவின் கோரிக்கையை அப்போது அராங்கம் நிராகரித்தது. அது அமெரிக்காவையும் பிளேக்கையும் நிச்சயமாக கோபத்துக்குள்ளாக்கியிருக்கும். அதன் விளைவாகக் கூட இப்போதைய  அழுத்தங்கள் இருக்கலாம்.
அதேநாள் மாலை மற்றொரு சம்பவம்.  ஜனாதிபதியின்  மூத்த ஆலோசகராக இருந்த  பஷில் ராஜபக்ஷவை பிளேக் சந்திக்கிறார்.  அப்போது இறந்தவர்களின் சடலங்களையும், காயமுற்றவர்களையும் மீட்க சர்வதேச  செஞ்சிலுவைக் குழுவை போர்முனைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியிருந்தார்.
அவரது அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது.   எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கி@றாம் என்று கூறி அனுப்பப்படுகி றார் பஷில். ஒரே நாளில்  இரண்டு தடவைகள் அமெரிக்காவின் பிளேக்கின் கோரிக்கைகளை நிராகரித்தது அராங்கம்.
உலகின்   வல்லரசு நிலையிலுள்ள  தம்மை உதாசீனம்  செய்ததை பிளேக்கோ, அமெரிக்காவோ அவ்வளவு இலகுவாக மறந்திருக்க நியாயமில்லை.
அந்தக் கட்டத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை போர்முனையில் செயெற்பட அனுமதி கொடுத்திருந்தால், இராணுவம் மீது இன்று பல போர்க்குற்றச்சாட்டுகள்   சுமத்தப்பட்டிருக்காது.   போர்  முனையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம் ஓளரவுக்கு உறுதியாகியிருக்கும்.
அந்தக் கட்டத்தில்  பிளேக்   முன்வைத்த இரண்டு யோசனைகளுமே  இலங்கை அரசை  பிற்காலத்தில் காப்பாற்றக் கூடியவை என்பதை அரசாங்கம் அப்போது அறிந்திருக்க நியாயமில்லை.   அப்படியோர் எண்ணப்பாட்டில் பிளேக் யெற்பட்டாரா என்பதும் தெரியவில்லை.
ஆனால், இலங்கை அராங்கத்துக்கு பிளேக் புலிகளைக் காப்பாற்ற  முனைந்தார் என்ற எண்ணம் இருப்பதாகவே தான் தெரிகிறது.   ஏனென்றால், கடந்த வாரத்தில் கூட இந்தியா ஆதரவாக இல்லாது போயிருந்தால் பிரபாகரனை நேட்டோ காப்பாற்றிக் கொண்டு சென்றிருக்கும் என்று கூறியிருந்தார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும.
நேட்டோவோ, அமெரிக்காவோ புலிகளையோ, பிரபாகரனையோ காப்பாற்ற வேண்டிய தேவை இருந்திருக்கவும் இல்லை. அதற்கான  முயற்சியில் ஈடுபட் டிருக்கும் என்று நம்பக் கூடிய நிலையும் இல்லை.   போரின் இறுதிக் கட்டத்தில் மேற்குலகம் மேற்கொண்ட சில முயற்சிகளை அராங்கம் தவறாகவே பார்த்துள்ளது.  அதன்  விளைவுகள் தான்  இன்றுவரை   அரசாங்கத்தைத்   துரத்திக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், அமெரிக்காவையோ, மேற்குலகையோ கடுமையாக அதிருப்தி கொள்ளவைக்கும் விடயம் என்னவென்றால், சரணடைவு முயற்சிகள் ஏதும் நடக்கவேயில்லை என்று கூறுவதுதான்.
இந்தியாவின் ஹெட் லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த பேட்டியில், பாதுகாப்புச்யெலர் கோத்தாபய ராஜபக்ஷ, புலிகள் சரணடைவது  தொடர்பாக  தன்னை யாரும் அணுகவில்லை  என்று கூறியிருந்தார்.   ஆனால் பிளேக் அவரை அணுகி கோரிக்கை விடுத்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
அதுபோல, புலிகள் கடைசி நேரத்தில் சரணடைய இணங்கியது பற்றி நோர்வேயும் அறிந்திருந்தது.  ஏனென்றால், நோர்வே ஊடாகத் தான் அத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார் பிளேக். இப்படியாக அராங்கத்தின் இப்போதைய நிலைப்பாடுகள், உலகமே இறுக்கக் கண்ணை  மூடிக்கொண் டிருக்க   தாம் மட்டும் விழித்திருந்தது போன்று உள்ளது.
கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லை என்று கூறிய பின்னரும், அவை பயன்படுத்தப்பட்டதை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டது, கனரக ஆயுதப் பாவனையை நிறுத்தியதாக அறிவிக்கப்பட்ட பின்னர்,     நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தேங்கள் குறித்தும்   செய்மதிப் படங்களை  ஜனாதிபதி   மஹிந்த   ராஜபக்ஷவிடம்   அமெரிக்கா  காண்பித்தது   எல்லாவற்றையுமே விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
ஆக, அமெரிக்கா போரை அங்குலம், அங்குலமாக அறிந்து வைத்துள்ளது.  அப்படிப்பட்ட அமெரிக்காவுடன் இலங்கை இணங்கிப் போகாமல்  முரண்டு  பிடிப்பதற்குக்  காரணம் தான்  என்னவென்று  புரியவில்லை.
போர் முடிவுக்கு வந்து விட்டதாக கோத்தாபய ராஜபக்ஷ கூறிய நிலையில் மே 17 ஆம் திகதி அனுப்பிய ஒரு தகவலில் – போர் முடிந்து விட்டால் காரியங்களை   ஆற்றுவதும்,   நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும், அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதும் அவசியமான அவசரமான விடயங்கள் என்று பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
இது பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குக் கூறிய விடயங்கள்.
ஆக பிளேக்கும், அமெரிக்காவும்   இந்த விடயங்களை மிகத் தெளிவாகவே இலங்கை அரசிடம் கூறியிருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், போருக்குப் பிந்திய காலத்தை அத்தகைய எதிர்பார்ப்பை ஈடுசெய்ய பயன்படுத்திக் கொள்ள அராங்கம் தவறி விட்டது. இதன் விளைவு தான் அமெரிக்கா,  பிளேக்,   மேற்குலகம் எல்லாமே   எதிர் நிலைப்பாடுகள் எடுக்கக் காரணம்.
இவையெல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆனால், அராங்கம் தான் இன்னும் தாம் இருட்டுக்குள் இருக்கப் போவதாக அடம்பிடிக்கிறது.
இலங்கை அரசை  வழிக்குக் கொண்டு வரும் ஆயுதங்களைத் தான் இப்போது அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது.  அதற்கும் வழிக்கு வராது போனால் அடுத்த கட்டமாக, அமெரிக்கா தன்னிட முள்ள ஆதாரங்களை எல்லாம் வைத்துக் கொண்டு இலங்கையை மிரட்டத் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக