செப்டம்பர் 05, 2011


இந்து சமுத்திர ஆதிகாரப்போட்டியில் இலங்கை பலிகடாவாகுமா?? – சுபத்திரா

இலங்கையின் வான்   எல்லைக்குள்   அமெரிக்கப்  போர்  விமானங்களின்   அணி  ஒன்று   ஊடுருவியது  பற்றிய  சர்ச்கைள்  தணிந்துள்ள  நிலையில்,   சீன வேவுக்  கப்பல்  ஒன்றுக்கு  இலங்கை  அடைக்கலம் கொடுத்தது   பற்றிய   சர்ச்சைகிளம்பியுள்ளது .
அதுவும் இந்தியாவை வேவு பார்த்த சீன வேவுக் கப்பலே கொழும்புத் துறைகத்தில் அடைக்கலம் தேடியதாக இந்திய ஊடகங்கள் செயதி வெளியிட்டுள்ளன.  அந்தமான்  கடலில் சுமார்    20 நாட்கள்  வரை 
  தங்கி  நின்ற   இந்தக்  கப்பல்   இந்திய  கடற்பகுதியில்  வேவு  பார்த்துள்ளது.
மீன்பிடி இழுவைப் படகு போன்று தோற்றமளித்துள்ள இந்தக் கப்பலை இந்தியக் கடற்படை சுமார் மூன்று வாரங்கள் வரை கண்டு கொள்ளாதிருந்துள்ளது.  அதற்குப்  பின்னர் தான்  இந்திய  கடற்படை யினரின்  ரேடர்களில் அது சிக்கியுள்ளது.
அது சீன வேவுக் கப்பல் என உறுதிசெய்த  பின்னனர  அதனை இந்தியக் கடற்படை மடக்க  முயன்றுள்ளது.  இந்தியா உஷாரடைந்து விட்டதை உணர்ந்த  சீனக் கப்பல்  சர்வதேச கடல்  எல்லைக்குள்  நுழைந்து  கொழும்புத்  துறைகத்துக்குள்  தஞ்சமடைந்து விட்டது.
22 ஆய்வு  கூடங்களுடன் கூடிய  இந்தக் கப்பல்   இந்து சமுத்திரத்தின்   கடலின்  ஆழம்,   வெப்பநிலை,   தன்மைகள்   குறித்த   ஆய்வில்   ஈடுபட்டு தரவுகள் சேகரித்திருக்கலாம்  என்று   இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.     சீனா கட்டி வரும்   விமானம்    தாங்கிக்  கப்பலுக்கும்   டோபிடோக்களைப்   பயன்படுத்துவதற்கும்,    நீர்மூழ்கிகளின்   பயன்பாட்டுக்கும்   இவை   தேவைப்படுவதாக   இந்திய அதிகாரிகள்  குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், சீன வேவுக் கப்பல் என்ன தகவலை திரட்டியது என்ற உண்மையான விபரம் யாருக்கும் தெரியாது. அது சிக்கியிருந்தால் தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.   ஆனால், இந்தியா பொதுவாக    கிழக்குக் கரையோரப் பகுதிகளில் இருந்து  ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்துவது வழக்கம்.   அண்மைக்காலமாக  இதுபோன்ற  சோதனைகள்  நடத்தப்பட்ட போது  சீனா  அதனை வேவு பார்த்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
சீனாவின் ஆதிக்கம் இந்து சமுத்திரத்தில் வலுப்பெற்று  வருவது இந்தச் சம்பவத்தின்  மூலம் உறுதியாகியுள்ளது.  எதிர்வரும் காலங்களில் சீனாவின் கடல் ஆதிக்கம்   இந்து   சமுத்திரத்தில்    அதிகரிக்கும்  என்றும்  இவை போன்ற    ஊடுருவல்கள்   இடம்பெறும் என்றும்  முன்னாள் இந்தியக் கடற் படை அதிகாரி  ஒருவர்  இந்திய ஊடகம்  ஒன்றிடம் கூறியுள்ளார்.
அதற்கான சமிக்ஞைகள் ஏற்கெனவே வெளிப்படத் தொடங்கியுள்ளன.    சீனா ஒரு விமானம்   தாங்கிக் கப்பலை தானாகவே கட்டி மு டித்துள்ளது. இது வெள்ளோட்டம் விடப்பட்டு விட்டது.  ஆனால். இன்னம் பயன்பாட்டுக்கு வரவி ல்லை.
அதில் சில திருத்தங்கள், சீரமைப்புகள் நடை பெற்று வருகின்றன என்பதை சீனப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் யங் யுஜின் கடந்த புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் சீனாவின் கடற் பாதுகாப்பு  மூலோபாயமானது ஆழ்கடல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.   சீனாவின் இந்த விமானம் தாங்கிக் கப்பல் ஆசிய நாடுகள் பலவற்றுக்கு  பீதியைக் கிளப்பி விட்டுள்ளது.  குறிப்பாக, இந்தியா இந்த விடயத்தில் கலக்கமடைந்துள்ளது.
அமெரிக்காவின்  பாதுகாப்புத்  திணைக்களமான  பென்டகன்  அண்மையில்  வெளியிட்ட   அறிக்கை   ஒன்றில் சீனாவின் படைபலக் கட்டு மானங்கள்  இந்தியாவை  அவநம்பிக்கை  கொள்ளச்செய்யும்    என்றும்   அச்சமூட்டும்    வகையில்   உள்ளதென்று   கூறியிருந்தது.  ஆனால்,  இந்தக்  கருத்தை   சீனப் பாதுகாப்பு   அமைச்சின்  பேச்சாளர்  மறுத்துள்ளார்.
சீனாவும்  இந்தியாவும் எதிரிகள் அல்ல அயலவர்கள்  பங்காளிகள் என்று விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.  ஆனால், உண்மையில் சீனாவும் இந்தியாவும் அவ்வாறு  இருக்கவில்லை என்பது  வெளிப்படையான உண்மை.
சீனா ஒரு விமானம் தாங்கிகப்பல் பற்றியே வாய்திறந்துள்ளது.  ஆனால், சீனா கட்டும் விமானம் தாங்கிக் கப்பல்களின் எண்ணிக்கை இரண்டு என்றும், மூன்று என்றும் தகவல்கள் வெளியாகின்றன.   இது   இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒன்று.
இந்த விமானம் தாங்கி போன்றவற்றுக்குத் தேவைப்படும் தரவுகளைச் சேகரிகேப்பதற்கே சீன வேவுக் கப்பல் அந்தமான் கடலில் வேவு பார்த்ததாகக் கருதப்படுகிறது.   இந்து சமுத்திரத்தில் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் நிறுத்தப்படலாம் என்ற நிலை உருவாகி வருகிறது.
அது இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு விடயமாக இருக்கும்.
விமானம் தாங்கிகள் மட்டுமின்றி  நீர்மூழ்கிகளினது   நடமாட்டங்களும்   இந்து   சமுத்திரத்தில்    அதிரிகக்கலாம்.  இது   இந்து சத்திரப் பிராந்தியத்தின் அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்திய, சீன ஆயுதப் போட்டி இந்து சமுத்திரத்தில் வளர்ச்சியடைவ தற்கு இலங்கையும் ஒரு காரணமாகி விட்டது.
சீன வேவுக் கப்பல் கொழும்புக்குள்தான் அடைக்கலம் தேடியது என்கின்றன இந்திய ஊடகங்கள்.  ஆனால், இலங்கை கடற்படையோ அப்படி எந்த வேவுக் கருவிகளும் பொருத்தப்பட்ட சீனக் கப்பல்கள் கொழும்புத் துறைகத்துக்குள் வரவில்லை என்கிறது.
சீனக் கப்பல் கொழும்புத்  துறைமுகத்துக்குள்  நுழைந்ததைக் கண்டுபிடிப்பது   ஒன்றும்  இந்தியாவுக்கு கடினமான   காரியமாக இருக்க முடியாது.  அதேவேளை,  இந்தச்செய்தி பொய் என்று  இந்தியா மறுக்கவும் இல்லை.
கடந்த ஜுலை மாதம் வியட்நாக்குச் சென்றிருந்த இந்தியக் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் ஐராவதி சீனக் கடற்படைக் கப்பல் ஒன்றினால் இடைமறிக்கப்பட்டதாக  இங்கிலாந்துப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை  இந்தியா  நிராகரித்திருந்தது. அதுபோல இந்தச் செய்தி நிராகரிக்கப்படவில்லை.
எனவே, சீன வேவுக்கப்பல் விவகாரத்தில்  இலங்கைக் கடற்படையின் நிராகரிப்பு எடுபடுமா? என்பது சந்தேகம் தான்.
இதற்கிடையே சீனாவும், இந்தியாவும் இந்து சமுத்திரத்தில் ஒளித்துப் பிடித்து ஆடப்போகும் விளையாட்டில் இலங்கை தான் மையமாக இருக்கப் போகிறது .
அம்பாந்தோட்டையில் கட்டப்பட்டு  வரும்   துறைமுகம்   சீனாவின் கடல் ஆதிக்கத்துக்கான ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்படுகிறது.  இப்போது சீனா கொழும்புத் துறைமுகத்துக் குள்ளேயும் கால் வைத்து விட்டது.
கொள்கலன் இறங்குதுறை ஒன்றை கொழும்புத் துறைகத்தில் நிர்மாணித்து அதனை இயக்கும் உரிமையைப் பெற்றுள்ளது சீனா.  இது கொழும்புத் துறைமுகத்தை சீனப் படையின் தேவைகளுக்குப் பயன்படுத்தவதற்கு வசதியாகி விடும்.  இவையெல்லாம் அயல் நாடான இந்தியாவுக்குள் பாதுகாப்பு தியில் அச்சுறுத்தலைக் கொடுக்கக் கூடியவை.
போரைக் காரணம் காட்டி சீனாவுடனான  உறவுகளை வலுப்படுத்தி  வந்த இலங்கை  இப்போது, அபிவிருத்தியைக் காரணம் காட்டி வலுப்படுத்தி வருகிறது.   சீனாவுடனான   இந்த நெருக்கத்தை குறைப்ப தற்கு  இந்தியா மேற்கொள்ளும்  முயற்சிகள் ஒன்றும் பலித்ததாகத் தெரியவில்லை.
சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையில்  எப்படி வளைந்து, நெளிந்து, சுழித்து ஓடலாம் என்பதை இலங்கை நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறது.   அதனால்  இரண்டு   நாடுகளிடம்   வாங்கிக் கொண்டு இலங்கை அரசு நழுவிக் கொள்கிறது.
இந்து சமுத்திரத்தில் ஆதிக்கப் போட்டி தீவிரம் பெறும் தான். இதன் பலாபலன் எப்படி அமையும் என்பதை இலங்கை உணர்ந்து கொள்ளும்.
அத்தகையதொரு நிலையில் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் கூட வியப்பில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக